Featured Events & Programs


Banner


Banner
Class Info

சுவாமி சிவானந்தர்

சுவாமி சிவானந்தர் 1887ம் ஆண்டு; தமிழ்நாட்டில் உள்ள பட்டமாடி என்னும் கிராமத்தில் பிறந்தார். இவர் கல்வியில் மேலோங்கி மலேசியாவில் வைத்தியராகக் கடமையாற்றினார். பின் வைத்தியத்துறையில் இருந்து விடுபட்டு 1924ம் ஆண்டு இமயமலைக்கு சென்று சுவாமி விஸ்வானந்தா சரஸ்வதி மூலம் யோக தீட்சை பெற்றார். சுவாமி இந்தியாவில் அனைத்து இடங்களுக்கும் சென்று மக்களை யோகக்கலையில் ஈடுபடவைத்து மனித வாழ்க்கையை பூரணத்துவமாக வாழ வழிகாட்டினார். சுவாமி சிவானந்தர் முதல் முதலாக 1936ம் ஆண்டு திவ்விய ஜீவன சங்கத்தினை இமயமலையில் ஆரம்பித்தார். சுவாமி அவர்கள் 1945ம் ஆண்டு சிவானந்த ஆயுள்வேத மருந்தகத்தை நிறுவினார். அதுமட்டுமல்லாது சுவாமியின் வாழ்க்கைக்காலத்தில் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கி அவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார். சுவாமி அவர்கள் எதிர்கால சந்ததிக்காக யோகம் சம்மந்தமான 200க்கும் மேற்பட்ட பல அரிய நூல்களை எழுதியுள்ளார்.