![]() ![]() |
![]() பெண்களும் யோகாவும்சமூதாயத்தில் பெண்ணின் பங்கு முக்கியமானது. தாய்மையின் மூலம் உயிர் ஒன்றை கொடுக்கின்றாள். தன் குழந்தையை பல சிரமத்தின் மத்தியில் வளர்த்து நற்பிரசையாக்குகின்றாள். பெண்கள் பருவமடையும் காலத்தில் பல பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார்கள். அதேவேளை சில பெண்கள் பக்குவம் அடையாமல் இருக்கின்றார்கள். நாளம் இல்லாச் சுரப்பிகள் சரிவர வேலை செய்யாமல் இருப்பதே இந்நிலைக்குக் காரணமாகக் காணப்படுகின்றது. யோகாசனப் பயிற்சிகளின்மூலம் நாளம் இல்லாச் சுரப்பிகளை சரிவர வேலை செய்ய வைத்து இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம். பெண்களுக்கு மாதவிடாய் தொடர்பான பல பிரச்சனைகள் காணப்படுகின்றன. மாதவிடாய் ஒழுங்கின்மை, அதிக இரத்தப் போக்கு, வயிற்று வலி, களைப்பு, மாதவிடாய் அதிக நாட்கள் நீடித்தல், வெள்ளை படுதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். யோகாசனப் பயிற்சிகளின்மூலம் மேற்கூறிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணமுடியும். மாதவிடாய் நிற்கும் காலத்தில் பெண்கள் பல பிரச்சனைகளை எதிர் கொள்கின்றார்கள். இவர்கள் யோகாசனத்தில் ஈடுபட்டால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து இலகுவாக மீள முடியும். பெண்களுக்கு கர்ப்பகாலத்திலும், கர்ப்பகாலத்திற்குப் பின்பும் யோகப்பயிற்சி பல நன்மைகளை அளிக்கின்றது. முக்கியமாக யோகாசனம் கர்ப்பப்பையை பலப்படுத்துகின்றது. கர்ப்பகாலங்களில் பெண்களுடைய நாளம் இல்லாச் சுரப்பிகள் பல மாறுதல்களை அடைகின்றன. இதனால் நீரழிவு நோய் போன்றவை ஏற்படும். யோகப்பயிற்சி நாளம் இல்லாச் சுரப்பிகளை சரிவர வேலை செய்ய உதவி சுகப்பிரசவத்திற்கு வழிசெய்கின்றது. பெண்களுக்கு மகப்பேற்றுக்கு பின்பு காணப்படும் பிரச்சனைகளான மன அழுத்தம், மனப்பதட்டம் போன்றவற்றை நீக்கவும் யோகப்பயிற்சி உதவுகின்றது. தற்காலத்தில் பெண்களுக்குத் தாய்ப்பால் சுரப்பது மிகக்குறைவாகவே காணப்படுகிறது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி கூடியவர்களாகவும் நல்ல அறிவுடையவர்களாகவும் காணப்படுகிறார்கள் என ஆராச்சிகள் குறிப்பிடுகின்றன. “தாய்ப்பாலுக்கு நிகர் தாய்ப்பாலேதான்”. யோகாசனப் பயிச்சிகள் பிட்ருட்ரரி சுரப்பியை சரிவர வேலை செய்யப்பண்ணி, தாய்ப்பாலை நன்கு சுரக்கப்பண்ணுகின்றது. |